கருணாநிதியின் மஞ்சள் துண்டு ரகசியம்! இதற்காகத்தான் அணிந்தாரா…?

0
625
karunanidhi wear yellow towell reason

கருணாநிதி என்றாலே அவரது மஞ்சள் துண்டு கருப்பு கண்ணாடி பவளமோதிரம், சிவப்பு கை கடிகாரம் இதுதான் அவரது அடையாளம். (karunanidhi wear yellow towell reason,Tamilnews,karunanidhi )

கருணாநிதியின் 60 ஆண்டுகால அரசியல் வாழ்வில் கருப்புக்கண்ணாடி அவரது அடையாளமாகவே மாறிப்போனது. அரசியல்வாதியும் அவர்கள் கட்சி கொடியில் உள்ள கலரில் துண்டு அணிவது வழக்கம். ஒருவர் அணிந்துள்ள துண்டை வைத்தே அவர் எந்த கட்சியைச் சேரந்தவர் என்று எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.

1996ம் ஆண்டில் இருந்து கருணாநிதி மஞ்சள் துண்டை மட்டுமே அணிந்து வருகிறார். ஜோதிடர் அறிவுரைப்படி, குருவுக்கு உகந்தது என்பதால், அவர் மஞ்சள் துண்டு அணிவதாக, பரவலாக பேச்சு உண்டு. இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தபோதும், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதை நிறுத்தவே இல்லை.

கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என, ஆன்மிகவாதிகள் கூறி வந்தனர். ’எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை; ஒரு அடையாளத்துக்காகத் தான் அணிகிறேன்’ என, அவரே பலமுறை விளக்கம் அளித்திருந்தார்.

உண்மையில், கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது எனக் கூறி வந்தனர் கருணாநிதி குடும்பத்தார்.

கருணாநிதி தனது கையில் எப்போதும் கட்டியிருக்கும் கடிகாரத்தில் கறுப்பு நிற பட்டைதான் இருக்கும். சில ஆண்டுகளாக சிவப்பு நிற பட்டையுடன் கூட கடிகாரத்தை அணியத் தொடங்கி இருந்தார். அதைப்பார்த்த சிலர், வேலுாரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார் என்று கிளப்பி விட்டனர்.

கருணாநிதி இந்த கடிகாரத்தை, சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார். எதிரிகள் அழியவும், அவர் மீண்டும் முதல்வராகவும், நீண்ட ஆயுளுக்காகவும், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும் கூறப்பட்டது. தஞ்சாவூரில் பெரிய கோவிலில் நடைபெற்ற 1000மாவது ஆண்டு விழாவின் போது பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் கருணாநிதி. அப்போதும் அது சர்ச்சையை கிளப்பியது.

அதிமுக ஆட்சியின் அராஜகத்தை எதிர்க்க கறுப்புச் சட்டையும், வெள்ளை துண்டும் அணிந்தார். அதற்கும் காரணம் கூறினர். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும், கனிமொழி கைது செய்யப்பட்ட பின், டெல்லி பயணத்தின் போதும் கருணாநிதி வெள்ளைத் துண்டு அணிந்திருந்தார். மன அமைதிக்காக வெள்ளை துண்டு அணிந்தார் என்றும் கூறி வந்தனர். கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் மட்டுமல்ல… அவர் அணிகலன்களும் கூட இப்படி சர்ச்சையை கிளப்பின.

இப்படி சர்ச்சைக்கு உள்ளான இந்த அணிகலன்களும் அவருடன் அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:karunanidhi wear yellow towell reason,karunanidhi wear yellow towell reason,karunanidhi wear yellow towell reason