கருணாநிதியின் கல்லறையில் இடம்பெறும் வாசகம் இதுதான்..! – உயிர் துறப்பதற்கு முன்னர் கூறியுள்ளார் கருணாநிதி

0
599
karunanidhi wants Slogan burial place

தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி தனது கல்லறையில் ஒரு வாசகத்தை எழுதச் சொல்லி உத்தரவிட்டு இருந்தார். அந்த வாசகம்தான் அவரது கல்லறையில் இடம்பெறப்போகிறது.(karunanidhi wants Slogan burial place,Tamilnews)

திரையுலகிற்கும் அரசியலுக்கும் பிணைப்பை ஏற்பத்தியவர் கருணாநிதி. இன்றைய நிலையில், சினிமாவையும், அரசியலையும் பிரித்துப்பார்க்க இயலாத நிலைக்கு அடிக்கொலிட்டவர் கருணாநிதி. இரு துறைகளிலும் அவரது பெயரை தவிர்த்து விட முடியாது. அரசியல்வாதியாக அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அரசியலில் ஒருவரை மக்கள் தோற்கவிடவே இல்லை.

எப்போதும் தங்களுடைய பிரதிநிதியாகவே அவரைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதற்கு கருணாநிதியே சிறந்த உதாரணம். கடந்த 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட அவர் ஒரு தேர்தலில்கூட தோல்வியை தழுவவில்லை. அவரது தொடர் வெற்றிக்கு காரணம் அவரது யராத உழைப்பு. அரசியலில் மட்டுமல்ல, சினிமா வசனகர்த்தா, நாடக இயக்குநர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகங்களை கொண்டு ஓய்வே அறியாதவர்.

 

60 ஆண்டு தமிழ்நாட்டு அரசியலை அவர் சுழற்றி வைக்க காரணம், நேரங்காலம் பார்க்காத அயராத உழைப்பு. ‘எதையும் தாங்கும் இதயம் இங்கு உறங்குகிறது’ என்று அண்ணாவின் கல்லறையில் எழுதிய கருணாநிதி, ‘ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான் என்று எனது கல்லறையில் எழுதுங்கள்’ என்று முன்பே உத்தரவு போட்டுவிட்டுருந்தார். இந்த வாசகம்தான் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அமைய உள்ள அவரது கல்லறையில் இடம்பெறப்போகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:karunanidhi wants Slogan burial place,karunanidhi wants Slogan burial place,