வவுனியாவில் மனதுருக்கும் சம்பவம் : கண்கலங்கி தமிழ்த்தாயின் காலில் விழுந்து வணங்கிய பிரதி பொலிஸ் மா அதிபர்

0
1115
DIG deshabandu tennakoon crying vavuniya

வன்னிப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சேவையைப் பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.(DIG deshabandu tennakoon crying vavuniya,Tamilnews)

இந்த நிககழ்வில் கலந்து கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த வயோதிபத் தாயொருவர் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்போது அவர், மக்களுக்கு நல்ல வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபரால் எனது பிள்ளைகளின் நலனுக்காக வீடு ஒன்று அமைத்துக் கையளிக்கப்பட்டுள்ளது.

அவரை எனது மகனுக்குச்சமனாகவே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்துள்ளது. இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை எனக்குச் செய்து தந்துள்ளார் என்று தெரிவித்து கண்ணீர் மல்கினார்.

நிகழ்வில் குறித்த விடையத்தை அவதானித்துக் கொண்ருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னக்கோன், எழுந்து அந்தத் தாயை அரவணைத்து,கண்கலங்கினார்.

தாயின் காலில் வீழ்ந்து வணங்கினார். இந்தச் சம்பவம் கலாச்சார மண்டபத்தில் கூடியிருந்தவர்களை மனதுருகச் செய்தது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த வயோதிப தாயே அவர். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அவரது பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து வன்னிப்பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் பொலிஸாரின் பங்களிப்புடன் அவருக்கான நிரந்தரவீடு அண்மையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags: DIG deshabandu tennakoon crying vavuniya,DIG deshabandu tennakoon crying vavuniya