மீண்டும் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் தேர்தலில்! தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

0
471

வடமாகாண சபைக்கான நடப்பு முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் செயற்படுகின்ற நிலையில், அவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த காலங்களில் வெளிப்பட்டிருந்தன. CV Wigneswaran Participates Next Chief Minister Election TNA Decided Tamil News

இந்நிலையில் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வடமாகாண சபைத் தேர்தலின் போது விக்னேஸ்வரனுக்கு பதிலாக, கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதுமட்டுமன்றி அடுத்த தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லாத மாற்று அணியொன்றின் ஊடாக களமிறங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் விக்னேஸ்வரனையே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பில் முதற்கட்ட இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து உத்தியோக பூர்வமாக தமிழ் கூட்டமைப்பு விரைவில் அறிவிக்கும் என தெரியவருகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites