புதிய அரசமைப்பை ஆட்சியை பிடிக்க பயன்படுத்த வேண்டாம்! மகிந்தவுக்கு சம்பந்தன் அறிவுரை!

0
451

புதிய அர­ச­மைப்பை , சிங்­கள மக்­கள் மத்­தி­யில் பெரும் செல்­வாக்­கைக் கொண்ட மகிந்த ராஜ­பக்ச. மீண்­டும் ஆட்சி அதி­கா­ரத்­தைப் பிடிப்­ப­தற்­காக பயன்படுத்த வேண்டாம் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரிவித்துள்ளார். TNA Sambanthan Advices Former President Mahinda Rajapaksa Tamil News

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

ஆட்சி அதி­கா­ரத்­தைப் பிடிப்­ப­தற்­காக புதிய அர­ச­மைப்பைப் பயன்­ப­டுத்­த­வேண்­டாம் என்று மகிந்த ராஜபக்சவிடம் நேரில் கூறினேன்.

இந்த வேண்­டு­ கோளை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யின் சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் முன்­வைக்­கின்­றேன்.

தேசிய இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­கள் தொடர்­பில் மகிந்த ராஜ­பக்­ச­வும், அவ­ரின் பொது எதி­ர­ணி­யும் தங்­க­ளது நிலைப்­பாட்டை மாற்­றிக் கொள்­ள­வேண்­டும். நாடு மீண்­டும் இருண்ட யுகத்­துக்­குச் செல்­வதை தடுப்­ப­தற்­காக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்வை விரைந்து காண­வேண்­டும். முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான பொது எதி­ரணி முழு­மை­யான ஆத­ர­வைத் தர­வேண்­டும். போலிப் பரப்­பு­ரை­க­ளை­யும் இன­வா­த­கக் கருத்­துக்­க­ளை­யும் நடை­மு­றைக்­குச் சாத்­தி­ய­மற்ற உரை­க­ளை­யும் அவர்­கள் கைவி­ட­வேண்­டும்.

மேலும் நியா­ய­மான அர­சி­யல் தீர்­வைக் காண்­ப­தற்கு நிதா­ன­மான போக்கை கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யி­டம் நான் மீண்­டும் மீண்­டும் வேண்­டு­கோள் விடுக்­கின்­றேன் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites