நல்லூர் திருவிழாவுக்கு 500 பொலிஸார் கடமையில்!

0
561

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். Nalloor Festival 500 Police Officers Duty Tamil News

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக்கு குழுக் கூடடத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்ததாவது,

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர் ஆலயத்துக்கு வருடாவருடம் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.இதற்காக இம்முறையும் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites