150 பேரிடம், 8 கோடி ரூபாவை திருடிய பிக்கு : பொலிஸார் வலைவீச்சு

0
464
Monk 8 crore Fraud 150 people

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட பௌத்த தேரரை பொலிஸார் தேடி வருகின்றனர். (Monk 8 crore Fraud 150 people,Tamilnews)

நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள பல மக்களிடம் கோடி கணக்கில் பணம் மோசடி செய்த அஹுன்கல்ல விகாரையின் தேரரே மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக குறித்த தேரர் விகாரையில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

அஹுன்கல்ல, கல்வேஹேர மவலுவவத்தை விகாரையில் பணியாற்றும் இந்த தேரர், தான் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக செயற்படுவதாக குறிப்பிட்டு பிரதேச மக்களை ஏமாற்றியுள்ளார்.

விகாரைக்கு வரும் நபர்களின் மனதை மிகவும் நுட்பமான முறையில் மாற்றி ஏமாற்றியுள்ளார்.

அஹுன்கல்ல, பதுளை, வெல்லவாய, பண்டாரவல, கினிகத்ஹேன, அவிசாவளை, வெலிகம, கித்துல்கம, கண்டி, பல்லேகலை பிரதேசத்தை சேர்ந்த 150 பேரை ஏமாற்றி 8 கோடி ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென காணாமல் போன குறித்த தேரரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags: Monk 8 crore Fraud 150 people, Monk 8 crore Fraud 150 people,