அராலி குள்ள மனிதர்கள் பற்றி ஊடகங்கள் கட்டுக்கதை – வடக்கு மாகாண சபை உறுப்பினர் விசனம்!

0
650

யாழில் அராலி, மூளாய் போன்ற பகு­தி­க­ளில் மக்­கள் எவ­ரும் குள்ள மனி­தர்­க­ளைக் காண­வில்லை. ஆனால் ஊட­கங்கள் மட்­டும் அவ்­வாறு கூறு­கின்­ற­னர். எனவே அது வெறும் கட்­டுக்­க­தை­யாக இருக்­கும் என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒருவர் தெரிவித்துள்ளார். Jaffna Araly Mysteries Human Issue Tamil News

நேற்று நடை­பெற்ற சிவில் பாது­காப்­புக் குழுக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆவா குழு­வில் தலை­வர் வரு­டத்­துக்கு 3 தட­வை­கள் பிறந்த நாள் கொண்­டா­டு­கின்­றார். அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து 25 பட­கு­களை வாட­கைக்கு எடுத்து 200க்கும் அதிக மது­பா­னப் போத்­தல்­க­ளு­டன் வாள் வடி­வி­லான கேக்கை வெட்­டி­யுள்­ளார்.

அது தொடர்­பான ஒளிப்­ப­டங்­க­ளும் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால் பொலி­ஸார் அது தொடர்­பில் என்ன நட­வ­டிக்கை எடுத்­தார்­கள்? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அதே­வேளை, வலி.மேற்­கில் ஏற்­பட்­டுள்ள குள்­ள­ம­னி­தர் தொடர்­பான பிரச்­சி­னையை ஆராய பொது­மக்­க­ளுக்­கும், பொலி­ஸா­ருக்­கு­மு் இடையே அராலி அம்­மன் ஆல­யத்­தில் நாளை பிற்­ப­கல் 3 மணிக்கு கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites