UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!

0
1356
deraniyagala unp member threats muslim businessman

தெரனியகல ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபைத் தலைவர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு விடுக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.(deraniyagala unp member threats muslim businessman,Tamilnews)

குறித்த வீடியோவை தாமும் பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ள, ரணில் விக்கிரமசிங்க குறித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இதனை உறுதிபடத் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க. முக்கியஸ்தர்களான கபீர் காசிம், முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் மூலமாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் இந்த விவகாரத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறியப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முந்திய செய்தி

தெரனியகல பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகர்
ஒருவரை அச்சுறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைகளில் வேகமாக பரவும் நிலையில்,

இது தொடர்பில் மேலதிகமாக தெரியவருவதாவது,

திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் தேங்காய் எண்ணெய் விற்பனை நிலையம் ஒன்றை திறக்க பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபர் ஒருவரின் (தெரனியகல பிரதேச சபைக்கு சொந்தமான) கடை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ள அதேவேளை, குறித்த கடைக்கு பிட்டிங்கஸ் பொருத்தும் பணியை ஆரம்பித்துள்ளார்.

அதே பகுதியில் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரம் தேங்காய் எண்ணெய் கடை வைத்துள்ள நிலையில் தெரனியகல பிரதேச சபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் குறித்த கடைக்கு சென்று முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவ வீடியோ சமூக வலைகளில் வைரலாக பரவிவரும் அதேவேளை இது தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:deraniyagala unp member threats muslim businessman,deraniyagala unp member threats muslim businessman