விஷ மீன்கள் தாக்கின: நூற்றுக்கணக்கானோர் காயம்

0
771
Blue Bottle Jelly Fish Attack

 

மும்பை கடற்கரையில் புளூ பாட்டில் ஜெல்லி ஃபிஷ் எனப்படும் மீன்கள் தாக்கியதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். Blue Bottle Jelly Fish Attack

மும்பையிலுள்ள அக்ஸா கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் சிலர் கடலில் கால் நனைத்தபோது புளூ பாட்டில் ஜெல்லிஃபிஷ் வகை மீன்கள் அவர்களை தாக்கியுள்ளன. இதேபோல் மும்பையின் சௌபாத்தி கடற்கரை, ஜுஹூ கடற்கரையிலும் பலரை ஜெல்லிஃபிஷ் மீன்கள் தாக்கியுள்ளன. இந்த வகையில், 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளூ பாட்டில் ஜெல்லிஃபிஷ் வகை மீன்களுக்கு விஷம் நிறைந்த கொடுக்கும், நீண்ட வாலும் இருக்கும். பொதுவாக, இந்த மீன்கள் தங்களது கொடுக்கு மூலம் பிற மீன்களை தாக்கும்பட்சத்தில் அவை உயிரிழந்துவிடும்.

அதேசமயம் இந்த வகை மீன்கள் மனிதர்களை தாக்கும்பட்சத்தில் அவர்களுக்கு தாங்க முடியாத வலியும், அரிப்பும் பல மணி நேரங்களுக்கு தொடரும். எனினும், உயிருக்கு ஆபத்து ஏற்படாது.

இதுதொடர்பாக மும்பைவாசிகள் கூறுகையில்,‘பொதுவாக புளூ பாட்டில் ஜெல்லி ஃபிஷ் வகை மீன்கள் பருவமழைக் காலத்தின் மத்தியில் கடலிலிருந்து வெளிப்பட்டு கடற்கரையை நோக்கி கூட்டம், கூட்டமாக வெளியே வரும். இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் ஜெல்லிஃபிஷ் மீன்கள் வெளியே வந்துள்ளன’ என்றனர்.

இதனிடையே, கடந்த 2 நாட்களில் மட்டும், பலர் இந்த மீன்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Tamil News