பர்தா அணியத் தடை – A/L பரீட்சையில் மாணவிகள் எதிர்நோக்கிய அசௌகரியம்

0
637
advance level exam period Muslim girls prohibited wear hijab

(advance level exam period Muslim girls prohibited wear hijab)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று நாடளாவிய ரீதியாக ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்தநிலையில், நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முஸ்லிம் மாணவிகள் அணிந்திருந்த முகத்தை மறைக்கும் ஆடைகள் கட்டாயமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, பல முறைப்பாடுகள், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீனுக்கு கிடைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் இதனை உடனடியாக ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் கபீர் ஹாசிமிடம் முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் கபீர் ஹாசிம், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து, உரிய அறிவுரைகளை பரீட்சை அதிகாரிகளுக்கு வழங்குவதாக. கல்வியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, பரீட்சையின் போது, முஸ்லிம் மாணவிகளின் ஆடை உரிமை மறுப்பு விவகாரங்கள் இடம்பெற்றால், அவற்றை உடனடியாக தமது கவனத்திற்கு கொண்டுவரும்படி என்.எம்.அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(advance level exam period Muslim girls prohibited wear hijab)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites