புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மாணவன்

0
505
student escaped Scholarship Examination Hall

புலமைப் பரிசில் பரீட்சை மண்டபத்தில் இருந்து மாணவன் ஒருவன் வெளியே ஓடிய சம்பவம் பதியதலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. (student escaped Scholarship Examination Hall)

நாடு முழுவதும் நேற்றைய தினம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

பதியதலாவை மத்திய மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்துக்கு சென்றிருந்த மாணவன் ஒருவன், பரீட்சை ஆரம்பமாவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் திடீரென பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.

இதனால் சில வினாடிகள் பரீட்சை மண்டபத்தினுள் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பரீட்சை மண்டபத்தின் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொலிஸார் இந்த மாணவனை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் வீணாகியுள்ளது.

பதியதலாவை, வெலிகும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவனான இந்த சிறுவன் பரீட்சைக்கு பயந்து இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பரீட்சை மண்டபத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இந்த பரீட்சை மண்டபத்தில் 206 மாணவர்கள் பரீட்சையில் பங்கு பற்ற இருந்ததாகவும் தப்பியோடிய மாணவனுடன் சேர்த்து நான்கு மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கு பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; student escaped Scholarship Examination Hall