ரசிகர்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை சோனாலி பிந்த்ரே..!

0
336
Sonali bendre friendship day wishes

தமிழில் ”காதலர் தினம்” படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அது அபாயமான கட்டத்தை அடைந்த பிறகு தான் கண்டறியப்பட்டதாகவும் கூறி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்தார்.Sonali bendre friendship day wishes

பிறகு, சிகிச்சைக்காக தனது கூந்தலை கட் செய்த படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். ஆனால், இன்று நண்பர்கள் தினத்தன்று அவர் தனது முழு கூந்தலையும் இழந்த நிலையில் ஒரு வலிமிகுந்த, அழகான நட்பு குறித்த வாழ்த்து செய்தியை பதிவிட்டிருக்கிறார்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் அவர்மீது அக்கறை கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும். அவரது மனவலிமையானது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

இந்நிலையில், தனது நட்பு / நண்பர்கள் குறித்து சோனாலி பிந்த்ரே நேற்று பதிவிட்டிருந்த தகவல்.. :-

இது நான் தான். இந்த தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் என்னை வினோதமாக காண்கிறார்கள். ஆனால், இது தான் உண்மைகள். அது ஏன் என்று உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் இப்போது எனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அதிக கவனம் செலுத்துகிறேன்.

மகிழ்ச்சியை அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்கொள்ள விரும்புகிறேன். ஆம்..! இந்த சூழலில் நான் மிகுந்த வலியுடனும், சக்தி இன்றியும் தான் இருக்கிறேன். ஆனால், இப்போது நான் எனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்கிறேன். நான் எனது நண்பர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

அவர்கள் தான் எனது பலம், வலிமை. அவர்களது பிஸியான தருணங்களிலும் என்னிலை அறிந்து என்னுடன் நேரம் செலவழிக்க அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களது பிஸியான நிகழ்சிகளை எல்லாம் தள்ளி வைத்து என்னுடன் நேராக, அழைப்புகள், ஃபேஸ் கால், மெசேஜ் என எப்படி எல்லாம் என்னை தொடர்புக் கொள்ள முடியுமா… அப்படி எல்லாம் என்னுடன் எப்போதும் இருக்க முயற்சிகிறார்கள். என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடாமல் அவர்கள் என்னுடன் துணை நிற்கிறார்கள்.

உண்மையான, உன்னதமான நட்பை வெளிப்படுத்தும் என் நண்பர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். (இந்த படத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே)

இப்போதெல்லாம் நான் எங்கேனும் செல்ல வேண்டும் என்றால், மிக குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில், அதை நேரம் சிகை அலங்காரம் செய்துக் கொள்ள, அதில் கவனம் செலுத்த இப்போது தேவையில்லை. முடி இல்லாமல் இருப்பதும் அழகு தான். நேர்மறை எண்ணங்களை தேடி வளர்த்துக் கொள்ளுங்கள்., என நண்பர்கள் தினத்தன்று நட்பு மற்றும் தனது நண்பர்கள் குறித்து சோனாலி பிந்த்ரே இன்ஸ்டாகிராம் பதிவில் தனது சமீபத்திய படத்துடன் தெரிவித்துள்ளார்.

விரைவில் புற்றுநோயில் இருந்து பூரண குணமடைந்து, நல்வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப சோனாலி பிந்த்ரேவுக்காக நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

Tags :-Sonali bendre friendship day wishes