ஜனாதிபதி தனது சம்பளம் 95.000 ரூபா என்றது பொய்? – பிரசன்ன ரணதுங்க

0
492
Prasanna said information released President his salary false

(Prasanna said information released President his salary false)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சம்பளம் தொடர்பில் வெளியிட்ட தகவல் பொய்யானது என்று கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தனது ஒரு மாத சம்பளம் 95 ஆயிரம் ரூபா மட்டுமே என கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் கூற்று தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் மேல் மாகாண முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களிடம் பொய்யான தகவலைத் தெரிவித்து மக்களைப் பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றார் என்று அவர் குற்றம்சுமத்தினார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும்.

ஜனாதிபதி குறிப்பிட்ட சம்பளத்திலா, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்துகிறார்.

ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வுகளை நடாத்துகின்றார்.

இதனை மறைத்து ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்க முன்வருவாரா இருந்தால், அவர் சொல்வது பொய் என்பதை முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.

ஜனாதிபதி இதனைவிடவும் பொறுப்பாக இது போன்ற தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

இது மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் ஆகும். ஜனாதிபதி உண்மையைக் சொல்லுவாறாக இருந்தால் நல்லது எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

(Prasanna said information released President his salary false)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites