க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் கைது

0
474
Two close associates Makandure Madush arrested firearms Tamil News

இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த போது தன்கொடுவ, சிங்கக்குளிய பிரதேசத்தில் வைத்து தன்கொடுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். (GCE Advanced Level examination student arrested)

குறித்த பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 18 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பிரதேசத்திலுள்ள போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை கொள்வனவு செய்த மாணவன், பஸ் வண்டி வரும் வரை பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவனிடம் இருந்து ஹெரோயின் 30 மில்லிகிராம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவன் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ள நிலையில், தன்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; GCE Advanced Level examination student arrested