வாகனங்களின் விலை விரைவில் குறைக்கப்படும் – சிங்கப்பூர் உடன்படிக்கை ஒழுங்குமுறையானது – அஜித் பி பெரேரா

0
522
agreement Sri Lanka Singapore signed regular basis ajith perera

(agreement Sri Lanka Singapore signed regular basis ajith perera)

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான உடன்படிக்கை ஒரு ஒழுங்குமுறையான அடிப்படையிலேயே கைச்சாத்திடப்பட்டதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறுகிறார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

நாடாளுமன்ற விவாதம் முலம் அது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும், நிபுணர்கள் எவரும் உடன்படிக்கையை விமர்சிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாமரை மொட்டுக்கு ஆதரவான மருத்துவர்களும் தாமரை மொட்டு அரசியல்வாதிகளுமே விமர்சிப்பதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் வாகனங்களின் விலை குறைக்கப்படும் என்றும், நாட்டின் பணம் வௌிநாடுகளுக்கு சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்காக தற்காலிக தீர்வொன்றுக்கு வருமாறு பிரதமர் நிதியமைச்சருக்கு வழங்கிய ஆலோசனைப்படியே இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

(agreement Sri Lanka Singapore signed regular basis ajith perera)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites