ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!

0
676

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதியில் வழிபாடு செய்வதற்காக நேற்றுமுன்தினம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். UN Security Council India Membership Sri Lanka Supports Tamil News

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.


குறித்த சந்திப்பில், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்குவதற்கு இலங்கை முழுமையான ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமரின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் படங்களை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

நேற்று அதிகாலை திருப்பதியில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்த பிரதமர், அதையடுத்து சென்னை வழியாக கொழும்பு திரும்பினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites