யாழில் தொடரும் அச்சுறுத்தல்; மக்களை காப்பாற்றுமாறு கோரிக்கை

0
708
Threat continue Jaffna request save people

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகம் தெரிவித்துள்ளார். (Threat continue Jaffna request save people)

மக்களை அச்சமின்றி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண அரசாங்க முகவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் குழுவினர் மக்களை அச்சப்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், தொடர்ச்சியாக இரவு வேளைகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் மக்களின் வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது மக்களால் சுதந்திரமான வாழ்க்கையில் ஈடுபட முடியாத தேவையற்ற அச்சத்தில் வாழ நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் சிவில் பாதுகாப்பு குழு, யாழ்ப்பாணத்தின் ஏனைய பாதுகாப்பு பிரிவிற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகவும் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு பிரிதானியிடம் கேட்டுகொண்டதாகவும், இது தொடர்பில் தான் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் வாள் வெட்டுக் குழுக்களிக் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், பல்வேறு பகுதிகளில் குள்ள மனிதர்கள் திரிவதாகவும், அமானுஷ சக்திகள் நடமாடித் திரிவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து மக்கள் பெரிதும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Threat continue Jaffna request save people