அநுராதபுரத்தில் விபத்து- ஒருவர் பலி ஒருவர் காயம்

0
335
9 year old boy killed road accident Kinniya Police Trincomalee

அனுராதபுரம் – மஹவிலச்சிய – துனுமடலோவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் இளைஞர் காயமடைந்துள்ளார். anurathapuram accident one young men death other boy injected Lankan

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உந்துருளியை கட்டுப்படுத்த முடியாமல் உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மஹவிலச்சிய- கிரல்பிடியாவ பிரதேசத்தினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் சென்ற மற்றைய இளைஞர் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
anurathapuram accident one young men death other boy injected Lankan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites