இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 187 படகுகளும் சேதமடைந்துள்ளது – இந்திய மீனவர்கள் கவலை

0
413
Rameshwaram protesting federal government behalf Fisheries Congress

(Rameshwaram protesting federal government behalf Fisheries Congress)

மீனவ காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து வரும் செப்டம்பர் மாதம் இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ராகுல்காந்தி பங்கேற்பதில் சிக்கல் என இந்திய தேசிய மீனவ காங்கிரஸ் தலைவர் பிரதாபன் இராமேஸ்வரத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இந்திய தேசிய மீனவ காங்கிரஸ் தலைவர் பிரதாபன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மீனவ காங்கிரஸ் கட்சியினர்களும் இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களும் கலந்து கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய மீனவ காங்கிரஸ் தலைவர் பிரதாபன் இலங்கை அரசு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 187 படகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

இதற்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும். இல்லையென்றால் மத்திய மாநில அரசுகளை ஸ்தமிக்கும் அளவில் மிகபெரிய போராட்டங்கள் நடத்தப்படும்,

மேலும் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து வரும் செப்டம்பர் மாதம் இராமேஸ்வரத்தில் மிகபெரியளவில் ராகுல்காந்தி தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

ஆனால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போதிய வசதிகள் இல்லாததால் அவர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

பேட்டி – பிரதாபன் – இந்திய தேசிய மீனவ காங்கிரஸ் தலைவர்

(Rameshwaram protesting federal government behalf Fisheries Congress)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites