பாக்கிஸ்தான் அரசியல் மாற்றம் – கபில் தேவ், கவாஸ்கர், சித்து, அமீர்கான் தயார் – பரிசீலனையில் சார்க் தலைவர்கள்

0
411
Pakistani political change Kapil Dev Gavaskar Aamir Khan SAARC

(Pakistani political change Kapil Dev Gavaskar Aamir Khan SAARC)

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை இடங்கள் வென்ற இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்கவுள்ளது.

வரும் 11 ஆம் திகதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இதற்கான பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

சீனா, துருக்கி நாட்டு தலைவர்கள் வருகை தருவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதேபோல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனால், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், வராமல் புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை, தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது.

திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது.

(Pakistani political change Kapil Dev Gavaskar Aamir Khan SAARC)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites