அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

0
1144
Salary increases ministers, Parliament Members

இந்த மாதம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (Salary increases ministers, Parliament Members)

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது கிடைக்கும் 54,285 ரூபா சம்பளம் 125,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

தற்பொழுது பிரதிமைச்சர் ஒருவருக்கு 63,500 ரூபா சம்பளம் கிடைக்கின்ற நிலையில், இது 135,000 ரூபாவாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கிடைக்கும் 65,000 ரூபா சம்பளம் 140.000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது இவர்கள் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவை விட, 215 சதவீத கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இந்த அதிகரிப்பானது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அமுலுக்குவரும் என்றும் இந்த மாதம் நிலைவைத் தொகையுடன் கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவர், நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Salary increases ministers, Parliament Members