Categories: AustraliaHead LineWORLD

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள தமிழர்

 

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். Akshay Vengatesh Award Tamil News

தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் Princeton மற்றும் Stanford பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.

இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் – தந்தை கும்பகோணத்தையும், தாயார் தஞ்சாவூரையும் சேர்ந்தவர்கள். 1981ம் ஆண்டு, புதுதில்லியில் பிறந்த அக்‌ஷய் வெங்கடேஷ், ஆரம்பக் கல்வியை புது தில்லியில் தொடங்கியிருந்தாலும், தந்தையின் பணிமாற்றத்தால், பேர்த் நகருக்குக் குடிவந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.

சிறு வயதிலேயே அவருக்கிருந்த கணித வல்லமை காரணமாக “gifted children” என அடையாளம் காணப்பட்டு, விசேஷ பயிற்சிகள் பெற்றிருந்தார்.  சர்வதேச இயற்பியல் போட்டியான Physics Olympiad இல் பங்கு பெற்றுப் பதக்கம் பெற்ற போது அவருக்கு வயது பதினொன்று.  அதே போல் கணிதப் போட்டியிலும் அதற்கடுத்த வருடம் விருது பெற்றுள்ளார்.

14வது வயதிலேயே கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தில் இணைந்த மிகக் குறைந்த வயதுடைய மாணவன் என்ற சாதனையைச் செய்துள்ளார்.  கணிதத்தில் சிறப்புப் பட்டத்தை 17வது வயதில் அவர் பெற்ற போது, பல்கலைக்கழகத்தின் முதன்மை மாணவராகவும் கணிக்கப்பட்டார்.  2002ம் ஆண்டு, அவரது 21வது வயதில் Princeton பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரை Massachusetts Institute of Technology பேராசிரியராகப் பணிக்கு அமர்த்தியது.

ஆசிரியப் பணியையும் ஆராய்ச்சிப் பணியையும் தொடரும் இவர், கணிதத் துறையைச் சார்ந்தவர்களால் பல ஆண்டுகளாகச் செய்யப்படாத பல ஆராய்ச்சிகளை குறுகிய காலத்தில் செய்து முடிக்கிறார் என்று மற்றவர்களால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசை, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வதேச கணிதக் கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது.

“Fields Medal” விருது பெறும் இரண்டாவது ஆஸ்திரேலியர் பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் இந்த மகத்தான விருதை மேலும் மூவர் பெறுகிறார்கள்.  தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் Caucher Birkar ஒரு குர்திஸ் அகதி; ஜேர்மனி நாட்டை சேர்ந்த Peter Scholzeயின் வயது 24; மற்றவர் இத்தாலிய நாட்டை சேர்ந்த Alessio Figalli.

1936ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதுவரை ஒரே ஒரு பெண்ணிற்குத் தான் (காலம் சென்ற Maryam Mirzakhani) வழங்கியிருக்கிறார்கள் என்பது சற்று சங்கடமான செய்தி.

Editor

Share
Published by
Editor
Tags: Akshay Vengatesh Award Tamil NewsAustralia Tamil NewsSri Lanka Tamil NewsTamil News

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!

ஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு, கிஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. Samantha Naga Chaitaya kisses…

4 hours ago

இந்த இளம் நடிகை நித்தியானந்தாவின் சீடராம்… அதை நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரையிலிருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் பிரபல…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

பிரான்ஸில் காவல் நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து… இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலையாளி…!

Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். France Juvisy-sur-Orge…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.