மடு மாதா தேவாலயத்துக்கு மைத்திரிபால சிறிசேனவினால் வரவிருக்கும் வரப்பிரசாதம்!

0
509
President Maithripala Sirisena's Madu Church Pradesh Plan

மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. President Maithripala Sirisena’s Madu Church Pradesh Plan Tamil News

புனித பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் முதலாவது கத்தோலிக்கத் தேவாலயமான மடு அன்னையின் தேவாலயம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29ஆம் திகதி மடு அன்னையின் தேவாலயத்துக்கு தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னரே அவர் இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

மடு அன்னையின் தேவாலயத்தில் நடக்கும் திருவிழாக்களில், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழக்கமாகும்.

இதன் அடிப்படையில் புனித பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் பட்சத்தில் மடு தேவாலயப் பகுதிக்கான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு, போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படும். நீர் விநியோகம், சுகாதாரம், தங்குமிட வசதி, மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தையும் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites