Type to search

பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்

NEWS

பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அக்குரெஸ்ஸ நகரில் இருந்து தவலம நகருக்கு பஸ் வண்டியில் பயணித்த இரு இளம் பெண்களின் முகம் மற்றும் தொடைப் பகுதியை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த நபரை பிடித்து, அக்குரெஸ்ஸ பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். (People attacked youth)

குறித்த நபரை மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு இளம் பெண்களும் எதிர்ப்பு தெரிவித்த போதும், செவிசாய்க்காது தனது கையடக்கத் தொலைபேசியில் முகம் மற்றும் தொடையை வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இரு பெண்களும் குறித்த பஸ் வண்டியில் பயணித்தவர்களிடம் கூறவே, இவர்கள் சந்தேக நபரை பிடித்து தாக்கியதுடன், கையடக்கத் தொலைபேசியுடன் பொலிஸாரிடம் ஒப்ப்டைத்துள்ளனர்.

சந்தேக நபர் தெனியாய பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; People attacked youth


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: