விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்

0
1552
Naga snake miracle

நாகபாம்பு மற்றும் விரியன் பாம்பிற்கும் இடையில் ஏற்பட்ட வெறுப்பு நிலை காரணமாக, விரியன் பாம்மை நாக பாம்பொன்று விழுங்கிய சம்பவம் கிதுல்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (Naga snake miracle)

கொடிய விஷம் கொண்ட நாக பாம்பு வகைகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், நாக பாம்புகள் கிராமங்களில் பகல் வேளைகளில் உணவு தேடி நடமாடுகின்றன.

இதற்கு தீங்கு விளைவிக்காவிட்டால் அது மக்களை தீங்கு செய்யாது என்ற கருத்து முன்னோர்களிடையே நிலவிவருகின்றது.

இதனால் நாகபாம்புக்கு மனிதனால் மரண அச்சுறுத்தல் குறைவாகவே உள்ளது. இதேவேளை, விரியன் பாம்பு அநேகமாக இரவு வேளையில் தான் இரை தேடிச் செல்கின்றன. இதற்கு மனிதனால் எப்போதுமே மரண அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இந்த நிலையில், கிதுல்கல பிரதேசத்தில் நாகபாம்பு ஒன்று விரியன் பாம்புடன் சண்டையிட்டு, அதனை செயலிழக்கச் செய்து தனது வாய்க்குள் விழுங்கியுள்ளது.

இதனையடுத்து, நாகப்பாம்புக்கு நகர முடியாத நிலை ஏற்பட்டதனால் விழுங்கிய விரியன் பாம்பை வாந்தி எடுத்து விட்டு, சென்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Naga snake miracle