ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பை இருட்டடிப்பு செய்த மைத்திரி அரசின் மர்மம் என்ன?

0
519
Iran Foreign Affairs Minister Meets President Maithripala Sirisena

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். Iran Foreign Affairs Minister Meets President Maithripala Sirisena Tamil News

இந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட ஜனாதிபதி , கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விருப்பம் வெளியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சர், சக்தி, விவசாயம், தொழில்நுட்ப –பொறியியல் சேவைகள் போன்ற துறைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணங்கியுள்ளார்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணம் தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்புகள் தொடர்பான செய்திகளை இலங்கை அரசாங்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக நேற்று காலை வரை ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites