இலங்கை கடற்படைக்கு சீனாவிடமிருந்து மேலும் சில போர்க்கப்பல்கள்!

0
570
China Plans Donate More Warships Sri Lanka Navy

இலங்கை கடற்படைக்கு, சீனா போர்க்கப்பல் ஒன்றைக் கொடையாக வழங்கவுள்ளது என்று அண்மையில் கொழும்பில் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழாவில், சீன பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் தெரிவித்திருந்தார். China Plans Donate More Warships Sri Lanka Navy Tamil News

அதேவேளை மேலும் சில போர்க்கப்பல்களை இலங்கைக்கு சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீன ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங்,

வழங்கப்படும் ஒரு போர்க்கப்பல் தெற்காசியாவில், தற்போதுள்ள பிராந்திய இராணுவச் சமநிலையை பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தாது. இது பிரதானமாக கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சீனா மேலும் ஒன்று அல்லது இரண்டு போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites