நாயை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு போராடிய குவைட் தம்பதியர் – காணொளி வெளியானது

0
777
vavunia badulla bus conductor attack three person include bank staff

(CCTV video Kuwait couple fought permit pet dog Sri Lanka)

தமது செல்லப்பிராணியான நாயை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு போராடிய குவைட் தம்பதியர் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி  வெளியானது.

இந்த சம்பவத்தின் போது 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகள் நிறைவடையும் வரை குவைட் நாட்டவர் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

முதலில் இலங்கை சுங்க அதிகாரிகள் குறித்த குவைட் பெண்ணை தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இந்த காணொளியை அவதானிக்கும் போது குவைட் பெண் வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கும் அதிகாரி மீது தாக்குதல் நடத்துகின்றமை புலப்படுகிறது.

ஆனால், குறித்த தம்பதிகள் மீது சுங்க அதிகாரிகள் வன்மையான வார்த்தைகளை பிரயோகித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனாலேயே அவர்கள் சினம் கொண்டு அதிகாரிகளை தாக்கினார்களா என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

காணொளி ஆதாரம் சுவர்ணவாஹினி

(CCTV video Kuwait couple fought permit pet dog Sri Lanka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites