சட்ட விரோதமாக பட்டம் (காற்றாடி) விடுபவர்களுக்கு தண்டனை எச்சரிக்கை

0
411
tamil news dont play kite upper sky flying airplane head

(tamil news dont play kite upper sky flying airplane head)

சட்ட விரோதமான முறையில் வானில் பட்டம் (காற்றாடி) விடுவது தண்டனைக்குரிய குற்றம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு அருகாமையில் பட்டங்களை விடுவது சட்டவிரோதமானது என்பதுடன் தண்டனைக்குரிய குற்றம் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் என்பன தெரிவித்துள்ளன.

விமானங்களில் பட்டங்கள் மோதுவதனால் விபத்துக்கள் ஏற்படும் என சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் ஜெனரல் எச்.எம்.சி. நிமல் ஸ்ரீ சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டங்களை ஏற்றுவதற்கு தங்குஸ் மற்றும் நைலோன் நூல்கள் போன்றவை பயன்படுத்தப்படுவதால் அவை விமானத்துடன் சிக்குண்டால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும்.

அனைத்து விமான நிலையங்களுக்கும் அருகாமையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு உட்பட்ட வகையில் 300 அடி உயரத்தை பட்டம் விடுவதற்காக பயன்படுத்த முடியாது.

இதனால் சிறுவர்கள் மற்றும் பட்டங்களை ஏற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள், எந்தவொரு விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டங்களை விடுவதை தவிர்க்குமாறு சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

(tamil news dont play kite upper sky flying airplane head)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites