வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
434
Legal action professors received scholarship

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து புலமைப்பரிசில்கள் பெற்று உயர் பட்டப்படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள பேராசிரியர்கள் 486 பேர் நாடு திரும்பாததனால் பல்கலைக்கழகங்களுக்கு 813 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (Legal action professors received scholarship)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பாத பேராசிரியர்களின் பெயர்களை பிரசுரிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு சில பேராசிரியர்களுக்கு எதிராகவும் மற்றும் பிணையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் வௌ;வேறு பேராசிரியர்கள் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாட்டில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதனால் எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல புலமைப்பரிசில்கள் கொடுக்கப்படும் போது ஒப்பந்தங்களை கைச்சாத்திட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் புதிய இலாகா ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக இவர்கள் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை மீறிய உடனே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலகுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களின் பணத்தில் வெளிநாடு சென்று திரும்பாதது, நாட்டுக்கு ஏற்படுத்தும் பெரும் இழப்பு என கருதுவதாகவும் இதனால் இவர்களின் பெயர் பட்டியலை பிரசுரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Legal action professors received scholarship