கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்

0
788
Grandpass women murder suspect arrested

கிராண்ட்பாஸ் லெயார்ட்ஸ் ப்ரோட்வே பிரதேசத்தில் தனது கள்ளக் காதலியை கத்தியால் குத்தியும் கழுத்தை வெட்டியும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபரை 12 நாட்களுக்கு பின்னர் கைதுசெய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Grandpass women murder suspect arrested)

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை கொழும்பு 13 இல் வசித்து வந்த 32 வயதுடைய டீ.டீ. மனம்பேரி என்ற பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி லெயார்ட்ஸ் ப்ரோட்வே பகுதியிலுள்ள வியாபார நிலையத்திற்கு அருகில் இருந்த பெண்ணொருவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தையும் வெட்டி நபரொருவர் தப்பியோடியுள்ளார்.

இதன்பின்னர், குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஏன் என்னை கைது செய்வதற்கு தேடுகின்றீர்கள் என்று பொலிஸாரிடம் வினவியுள்ளார். இதன்போதே பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் தனது சட்டபூர்வ மனைவியையும், உறவினர்களையும் விட்டு பிரிந்து தனது கள்ளக் காதலியுடன் வாழ்ந்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கத்திக்குத்து ஏற்பட்டுள்ளதாகவும் 46 வயதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Grandpass women murder suspect arrested