முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்

0
787
Good News Three Wheelers Drivers

முச்சக்கரவன்டிகளின் பாவனையை ஊக்குவிக்க அந்த வாகனங்களில் வைபை வசதிகள் மற்றும் வீதி வரைப்படங்கள் உள்ளடங்க நவீன வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக வட்டி இல்லாத கடன் வசதிகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். (Good News Three Wheelers Drivers)

தற்போது பாவனையில் உள்ள எரிபொருள் முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக, மின்சார முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றப்படும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு விசேட சலுகைகள் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நாட்டில் சுற்றுலாத்துறைக்கு ஏற்றதான முச்சக்கர வண்டி சேவையை ஆரம்பிக்கும் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு விசேட பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் 1.3 மில்லியன் முச்சக்கரவண்டிகள் உள்ளன. இவைகளில் 8 இலட்ச வாகனங்கள் நாள்தோறும் பயணிகளின் போக்குவரத்துகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
கொழும்பு நகரில் மாத்திரம் 60,000 முச்சக்கர வண்டிகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்த ஆரம்ப விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுற்றுலா துறையை முன்னேற்றுவதன் மூலம் நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க வழி வகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Good News Three Wheelers Drivers