எதிர்கட்சி தலைவர் பதவியை குமார வெல்கமவிற்கு கொடுங்கள் – உதேனி கோரிக்கை

0
374
Ullani Athokorala demanded opposition leader given Kumara Welgama

(Ullani Athokorala demanded opposition leader given Kumara Welgama)

எதிர்கட்சி தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொடுக்க வேண்டும் என அனைத்திலங்கை உள்ளூராட்சி மன்ற சம்மேளனத்தின் தலைவர் உதேனி அதுகோரல கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பழமையான உறுப்பினர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு அந்த பதவி வழங்குவதில் எந்தவித தவறும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவு செய்யப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(Ullani Athokorala demanded opposition leader given Kumara Welgama)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites