Categories: INDIATop Story

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் விசாரித்தனர்.india tamilnews chief minister vice chief minister health karunanidhi

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அப்போது தீவிர சிகிச்சைபிரிவில் உள்ள கருணாநிதியை முதல்வரும் துணை முதல்வரும் நேராக பார்த்தனர்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று மாலை திடீர் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்றிரவே கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

முதல்வர் வருகை :

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

ஸ்டாலினிடம் விசாரிப்பு :

திமுக தலைவரின் உடல்நிலை குறித்து முதல்வரும் துணை முதல்வரும் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அப்போது கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி முதல்வரிடம் மருத்துவர்கள் விளக்கினர்.

நேராக பார்த்த முதல்வர் :

இதைத்தொடர்ந்து ஐசியூவில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக பார்த்தனர்.

மருத்துவர்கள் கண்காணிப்பு :

ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அமைச்சர்களும் சென்றனர் :

அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம், காமராஜ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்றனர்.

கோபாலபுரம் இல்லம் :

கடந்த 26ஆம் தேதி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

காணொளி :

source : Oneindia Tamil

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: Breaking NewsDaily News in Tamildmk leaderdmk partyindia tamilnews chief minister vice chief minister health karunanidhiLeading News in TamilNewsToday Tamil NewsTop News

Recent Posts

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தை மறைமுகமாக தாக்கிய மஹேல

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். mahella…

9 mins ago

சீதக்காதி: விஜய் சேதுபதி 25…..!

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் உருவாகியிருக்கிறார். இப்படம் இயக்குனர் பாலாஜியின் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Sethupathy 25…

26 mins ago

இஸ்லாமிய இளைஞரோடு பழகியதற்காக இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய போலீசார்!

{ Police attacked teenager interfering } உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை போலீஸார் அடித்து உதைத்து இழுத்துச்…

27 mins ago

சிலை கடத்தல் வழக்குகள்; சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை

குறைந்தளவிலான பொலிஸார் இருப்பதனால் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க இயலாது என சி.பி.ஐ மறுத்துவிட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்றும் உயர் பொலிஸ் அதிகாரி…

1 hour ago

ஆடைகளை கழற்ற ரெடியாகி விட்டாராம் பூனம்…!

பூனம் பாண்டே கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியா வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் எனக் கூறினார். ஆனால் அவரின் இந்த முயற்சிக்கு…

1 hour ago

“பாகுபலி திரைப்பட கலைஞர்களை எவ்வகையிலும் பாராட்ட முடியாது ” பாகுபலி திரைப்படத்தை மட்டமாக பேசிய இசைஞானி

தமிழ் சினிமா மட்டுமன்றி உலகளாவிய சினிமா வட்டாரங்களில் இன்று வரை பேச பட்ட திரைப்படம் பாகுபலி தான் .SS  ராஜமௌலி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த  உலகளாவிய ரீதியில்…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.