இலங்கை கடற்படைக்கு உயர் திறன் போர் கப்பல் அன்பளிப்பு!

0
565

இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் நன்கொடையாக கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பலை அமெரிக்கா வழங்குகின்றது. America Donation USCG Cherman War Ship Sri Lanka Navy Tamil News

1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.

ஹவாயில் தரித்திருக்கும், ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22ஆம் நாள், நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

எனினும், 2019 பெப்ரவரி வரையில் இந்தக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் தற்போது சிறிலங்கா கடற்படையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 30 சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

இதேபோல கடந்த 2004ஆம் ஆண்டு அமெரிக்கக் கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட ‘யுஎஸ்சிஜி கரேஜஸ்’ என்ற போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்கு, நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா கடற்படையில் ‘எஸ்எல்என்எஸ் சமுத்ர’ என்ற பெயருடன் இயங்கிய இந்தப் போர்க்கப்பல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் , ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites