அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்

0
901
Girls Abuse Ethimaly Tamil News

‘அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்’ என்று பயமுறுத்தி தனது மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளையான 13 வயது சிறுமியை, சித்தப்பா முறையான நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். (13 year old girl sexually abused Uncle)

கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அளுத்கமை பகுதியைச் சேர்ந்த இந்த நபரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் முதல் திருமணத்தை விட்டு பிரிந்தவர்கள் என்றும் அளுத்கமை பொலிஸார் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

நீதவான் சந்தேக நபரை சமூக நோய்கள் தொடர்பான வைத்தியரிடம் வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 13 year old girl sexually abused Uncle