09 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய்

0
463
09 year old student sexually abused army soldier

ஒன்பது வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை ஏமாற்றி தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 40 வயதுடைய திருமணமான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (09 year old student sexually abused army soldier)

சந்தேக நபரான இராணுவ வீரர் குறித்த மாணவனின் பெற்றோரை அவர்களின் இல்லத்திற்கு சந்திக்கச் சென்றுள்ளார்.

குறித்த வீட்டில் வயதுடைய எவரும் இல்லாதிருந்ததனால் மாணவனை ஏமாற்றி, தனது இரு சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் பயன்படுத்தியுள்ளார்.

இந்தச் சிறுவன் சந்தேக நபரான இராணுவச் சிப்பாயிடம் இருந்து தப்பித்து, வேறு வழியால் வீட்டிற்குச் சென்று தனது தகப்பனிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுவனின் தந்தை சந்தேக நபரான இராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் மேற்கொண்டதுடன், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தாக்கப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் காவலின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் இரண்டாவது மனைவி இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொழில் தேடி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை தாக்கி காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்த மாணவனின் தந்தையை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சந்தேக நபரை கெகிராவை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 09 year old student sexually abused army soldier