கீரிகளுடன் இலங்கை இராணுவம் என்ன செய்கின்றது?

0
623

இலங்கை இராணுவம் கீரிக்குப் பயிற்சியளித்து வருகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. Sri Lanka Military Mongoose Training

வெடிபொருட்களை கண்டறியும் பொருட்டு இந்த பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறியியல் படையின் கீழ் 14 ஆவது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு ஆயுத படைப்பிரிவின் கீழ் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சிக்காக இலங்கையில் உள்ள சாம்பல் நிறமுள்ள கீரிகளே பொருத்தமானவை என்றும், பெண் கீரிகளுக்குப் பயிற்சி அளித்தால் அது நன்மை தரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையிலேயே கீரிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் கண்ணிவெடிகளை அகற்றும் பொருட்டு, கீரிகள் பயிற்றுவிக்கப்பட்டன. நாய்களுக்கு பயிற்சியளிக்கப்பட்ட போதிலும் அவற்றின் பாரம் காரணமாக வெடிப்பில் அவை உயிரிழக்கின்றமை காரணமாக அவற்றுக்கு பதிலாக கீரிகள் பயிற்றுவிக்கப்பட்டன.

கீரிகளை வைத்து போதைப் பொருட்களை கண்டறியும் முயற்சியும் இலங்கையில் முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.