தோல்வியை ஒப்புக் கொண்ட நவாஸ் ஷெரிஃப் அணி

0
509
TAMIL NEWS pakistan election nawaz sherif pary accept lose

(TAMIL NEWS pakistan election nawaz sherif pary accept lose)

பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பெறுபேறுள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதும், பாகிஸ்தானில் அமைகின்ற புதிய நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாக பிரதான கட்சியாக இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் கட்சிக்கு கிடைத்திருக்கும் முன்னிலையை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தங்கள் கட்சி மதிப்பளிக்கும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் ஹம்சா ஷாபாஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் 100 க்கும் அதிகமான தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றதாக நவாஸின் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.

தேர்தலில் முறைகேடுகள் என்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

வாக்குப் பதிவுக்கு முன்னர் தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்த போது அரசியல் அச்சுறுத்தல்களும், வன்முறை சம்பவங்களும் பாகிஸ்தானில் அதிக அளவில் இருந்ததாக ஐரோப்பிய கண்காணிப்பு குழு ஒன்று கூறுகிறது.

இராணுவத்தின் தலையீட்டால், இந்த தேர்தலில் பயனடைந்ததாக இம்ரான்கான் குற்றம்சாட்டப்படுகிறார்.

(TAMIL NEWS pakistan election nawaz sherif pary accept lose)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites