தவறு செய்துவிட்டேன் என வருந்தும் ஜனாதிபதி பாதுகாவலர்!

0
351
France President repatriation made wrong tamil news

பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலர் பணியில் இருந்து நீக்கப்பட்ட Alexandre Benalla, முதன் முதலாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தான் தவறு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். France President repatriation made wrong tamil news

மே 1 ஆம் திகதி நடைபெற்ற மே தின கூட்டத்தில் இருவரை சரமாரியாக தாக்கியுள்ள காணொளி வெளியானதைத் தொடர்ந்து, Alexandre Benalla பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, இந்த பிரச்சினையை வெளியில் கொண்டுவந்த Le Monde பத்திரிகை, நேற்று Alexandre Benalla உடனான நேர்காணல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அவர் தெரிவிக்கும்போது, “நான் பிரெஞ்சு ஜனநாயகத்துக்கோ, ஜனாதிபதிக்கோ துரோகம் செய்வது என் நோக்கம் அல்ல. நான் மிகப்பெரிய பிழையை இழைத்துவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மே தின கூட்டத்தில் வெறுமனே பொதுமக்கள் மாத்திரமே கலந்து கொள்ளவில்லை. இது CRS படையினருக்கும் நன்கு தெரியும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரகாலமாக நீடிக்கும் இந்த சர்ச்சையில், நேற்று தான் முதன் முதலாக Alexandre Benalla ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- France President repatriation made wrong tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்