விஜயகலாவை மைத்திரி அரசாங்கம் கைது செய்யாது – கம்மன்பில சாடல்

0
536
america fear gottabaya suitable president candidate tamilnews

(TAMIL NEWS sri lanka maithree governmnt not arreste vijayakala)

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை ஒரு போதும் மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம் கைது செய்யப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேசிய நூலகம் ஆவணவாக்கல் சேவைகள் சபை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் விசாரணை நடத்தும் விதத்தை பார்த்தால் இதற்கு தீர்வு கிடைக்காது.

இதனால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது கஷ்டமான விடயம் என்றும் கம்மன்பில கூறினார்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கி வருகிறது எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

(TAMIL NEWS sri lanka maithree governmnt not arreste vijayakala)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites