இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
342
Today Horoscope 25-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 9ம் தேதி, துல்ஹாதா 11ம் தேதி,
25.7.18 புதன்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 10:32 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 8:39 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.

.

மேஷம்:

பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் மிதமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.

 

ரிஷபம்:

உங்களின் பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொல்லை கொடுத்தவர் இடம் மாறிச் செல்வர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும்.

மிதுனம்:

சிலர் தவறான ஆலோசனை சொல்லலாம் கவனம். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை.

கடகம்:

குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். தகுதிக்கு மீறி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படலாம். லாபம் சுமாராக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

சிம்மம்:

கடந்த கால விஷயங்களை நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.

கன்னி:

அனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

துலாம்:

நீண்ட நாள் முயற்சி நிறைவேற வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். தொழில் வியாபாரத்தில்; நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

எதிர்வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வருமானம் சுமாராக இருக்கும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். உடல்நலனில் அக்கறை தேவை.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்