பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!

0
385
France tragedy happened because police officer forgot service owner

காவல்துறை அதிகாரி ஒருவர் ஆடையகம் ஒன்றில் தனது சேவைத் துப்பாக்கியை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். குறித்த துப்பாக்கி திருடப்பட்டுள்ளது. France tragedy happened because police officer forgot service owner

இதனால் குறித்த அதிகாரி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Brétigny-sur-Orge இலுள்ள Decathlon ஆடையகத்தில் உள்ள ஆடை மாற்றும் அறைக்குள் தனது சேவைத் துப்பாக்கியை வைத்துவிட்டு ஆடையை மாற்றிவிட்டு துப்பாக்கியை அங்கேயே மறந்து விட்டு சென்றுள்ளார்.

அதன்பின்னர், சிறிது நேரத்துக்குள்ளாக குறித்த அதிகாரி மீண்டும் வந்து ஆடை மாற்றும் அறைக்குள் தனது துப்பாக்கியை தேடியுள்ளார். ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை. உடனே கடையின் வாடிக்கையாளர்களை சோதனையிடும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தபட்டது. இருந்தும் அந்த துப்பாக்கி கிடைக்கவில்லை.

துப்பாக்கி குண்டுகள் முற்றாக நிரப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் துப்பாக்கி தொலைந்து போனமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, IGPN அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கடையின் கண்காணிப்பு கமராவிலுள்ள காணொளிகள் அனைத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், 2015 ஆம் ஆண்டு நவம்பர் பரிஸ் தாக்குதலின் பின்னர் காவல்துறையினர் துப்பாக்கிகளை வெளியில் கொண்டு செல்ல பிரான்ஸில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- France tragedy happened because police officer forgot service owner

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்