எண்ணெய் தயாரிப்பதற்காக இணையத்தில் பாம்பு வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்

0
287
woman snakes Internet producing oil

சீனாவில் எண்ணெய் தயாரிப்பதற்காக இணையத்தில் பாம்பு வாங்கிய ஒரு பெண் அந்த பாம்பினாலேயே கடிபட்டு இறந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. (woman snakes Internet producing oil)

மேலும் சீனாவின் வியனன் என்னும் நகரத்தைச் சேர்ந்த பெண் ஸியோபேங். இவர் எண்ணெய் தயாரிப்பதற்காக இணையத்தில் பாம்பு ஒன்று வாங்கினார். அந்தப் பெண்ணின் விரலில் பாம்பு கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸியோபேங் கோமாவில் விழுந்தார்.

அந்த பாம்பு அபூர்வ வகையைச் சேர்ந்தது என்பதால் அதற்குரிய குறிப்பிட்ட மருந்து இல்லாத நிலையில் மருத்துவர்கள் பொதுவாக பாம்புக் கடிக்கான மருத்துவம் செய்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பு கடித்து எட்டு நாட்களுக்குப் பிறகு ஸியோபேங் பரிதாபமாக உயிரிழந்தார். சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் ஒன்றான பாம்பு எண்ணெய் என்பது, பாம்புகளை ஆல்கஹாலில் மூழ்க வைத்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுவதாகும்.

இதற்கிடையில் எண்ணெய் தயாரிப்பதற்காக அந்தப் பாம்பை வாங்கினாலும், அதை செல்லப்பிராணியாக வளர்க்க ஸியோபேங் முடிவு செய்திருக்கலாம் என்று அவளது பெற்றோர்கள் கூறுகின்றனர்.

tags :- woman snakes Internet producing oil

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்