Categories: இன்றைய நாள்இன்றைய பலன்சோதிடம்பொதுப் பலன்கள்

இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 8ம் தேதி, துல்ஹாதா 10ம் தேதி,
24.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 8:55 வரை;
அதன் பின் திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 6:28 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:300–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : துர்க்கை, முருகன் வழிபாடு.

.

மேஷம்:

மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மாமன் மைத்துனர் வகையில் கேட்ட உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்

 

ரிஷபம்:

பிடிவாத குணத்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் வருமானம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் திடீர் செலவு உண்டாகும். வாகனப் பாதுகாப்பில் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும்

மிதுனம்:

அடுத்தவர் வியக்கும் வகையில் பணியாற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பியதை வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்…

கடகம்:

பணிகளில் மேம்போக்காக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவருக்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம்.

சிம்மம்:

பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். நல்லவர்களின் அறிமுகமும் ஆசியும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

கன்னி:

மனதில் எண்ணிய எண்ணம் செயல்வடிவம் பெறும். நண்பரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.

துலாம்:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

குடும்ப விஷயத்தைப் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரரின் அன்பும், ஆதரவும் நம்பிக்கை அளிக்கும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

செயலில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல் ஆரோக்கியம் பெறும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: daily horoscopeindraya rasi palanlatest horoscopesothidamtamil astrologytamil horoscopeToday Horoscope 24-07-2018

Recent Posts

அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை

அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்கக்கூட முடியவில்லை என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். (dmk couldnt shake admk ruling tamilisai…

11 mins ago

இங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது !

2018ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் Mercury Prize என்ற விருதை அதிரடிக் கலக்கல் Wolf Alice இசைக்குழு வென்றுள்ளது. Award Best Music Album UK 2018 இங்கிலாந்தின் சிறந்த…

12 mins ago

கடனை திருப்பி செலுத்த முதியவர்களுடன் உறவு கொள்ளும் சிறுமிகள் : கொடுமையின் உச்சம்

பொதுவாக கறுப்பின மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள தங்களது பெண் பிள்ளைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை…

14 mins ago

சுதந்திர கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த அதிரடி பதில்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்க்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Former President Mahinda…

1 hour ago

இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் வெளியிட்டுள்ளார். (Rafale deal Modi Betrayed…

1 hour ago

பொம்மைகளை அதற்காக பயன்படுத்திய கடைக்காரர் போலீசாரால் கைது : அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்

வெளிநாடுகளில் விபச்சாரம் செய்வதற்கு தற்பொழுது அதிகம் பொம்மைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றது .சிலிகான் மூலம்  செய்யப்படும் இந்த பொம்மைகள் பார்பதற்க்கு அசல் பெண்கள் போல் இருப்பதால் அதிக ஆண்கள்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.