யாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை

0
452
Robbery morethan five stores Jaffna

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர்கள், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். (Robbery morethan five stores Jaffna)

நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள், கடையில் இருந்தவர்களுக்கு வாள்களை காட்டி எச்சரிக்கை விடுத்து, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இலக்கத் தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு சென்ற ஆறு பேர் கொண்ட கொள்ளை குழுவினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த கொள்ளை கும்பல், கோண்டாவில் பகுதியில் வீதியில் சென்ற இருவரின் தங்க ஆபரணங்களையும் அறுத்து சென்றுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Robbery morethan five stores Jaffna