தேசியவளங்களை தாரைவார்த்துவிட்டு சீனாவிடம் பிச்சையெடுக்கும் நல்லாட்சி! திஸ்ஸவிதாரண குமுறல்!

0
391

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் விற்பனை செய்ததே இந்த அரசாங்கத்தின் சாதனை என்று லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பேராசிரியருமான திஸ்ஸவிதாரண குற்றம் சுமத்தியுள்ளார். professor Tissa Witharana Accusing Maithri Government

மத்தள விமான நிலையம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றை அரசு இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர் நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க மற்றும் இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு நாடு தற்போது சீனாவிடம் கையேந்திக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களின் சுதந்திரத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் திஸ்ஸவிதாரண அச்சம் வெளியிட்டுள்ளார்.

எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தேசிய வளங்கள் விற்கப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது என தெரிவித்த திஸ்ஸவிதாரண
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் முழு இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடும் என்றும் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites