பொது மக்களை பிணைக்கைதியாக வைத்திருந்தவர் பெண்ணொருவரை கொன்ற பின் சரணடைந்தார்!!

0
335
hostage general public surrendered after killing woman

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பொலிசார் ஒருவரை கைது செய்து ஒரு Joe என்ற மளிகை கடைக்குள் இருந்த பொது மக்களை 3 மணித்தியாலங்களாக பிணைக் கைதிகளாக வைத்திருந்து, ஒரு பெண்ணையும் சுட்டுக்கொன்ற பின் சரணடைந்த ஒருவரை .லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பொலிசார் கைது செய்தனர்.hostage general public surrendered after killing woman

குறித்த நபர் பிணைக்கைதிகளை பிடிப்பதற்கு சில மணித்தியாலங்களின் முன் தனது சொந்த பாட்டி மற்றும் வேறு ஒரு பகுதியைச் சேர்ந்த பெண்மணியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர் பொலிசாரால் துரத்தப்பட்ட போது தனது காரை Joe என்ற மளிகை கடையில் மோதியதால் காரிலிருந்து இறங்கிய போது பொலிசாரை அவரை நோக்கி சுட்ட போது அவரும் சுடத் தொடங்கினார். பின்னர் அக்கடைக்குள் புகுந்து கொண்டார். புகுந்தவர் அங்கிருந்த மக்களை பிணையக் கைதிகளாக பிடித்துக் கொண்டார். .

அவரை சரணடையக் கூறி பொலிசார் அவரை தொடர்பு கொண்டனர். 28 வயதான் அந்நபர் கடையில் இருந்து வெளியே வந்தபோது பொலிஸால் சூழப்பட்டார். அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

சந்தேக நபர் மளிகைக்கடையினுள் பெண்ணொருவரை சுட்டு விட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே காலமாகிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.