அமெரிக்க இராணுவத்தின் கட்டளைப் பீடத் தளபதி இலங்கையில் இரகசிய கலந்துரையாடல்!

0
610
America Military General Robert Brown Visits Sri Lanka

மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம், கண்ணிவெடி அகற்றல், அனைத்துலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற, இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான பேச்சுக்களில் ஈடுபடும் பொருட்டு அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். America Military General Robert Brown Visits Sri Lanka

சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தளபதி ரொபேர்ட் பிரவுணை வரவேற்கிறோம் என்று டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

எனினும், அவரது சந்திப்புகள், நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites